Random image

உத்தரபிரதேசம்: மழை வெள்ளத்துக்கு 76 பேர் பலி

லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த புதன்கிழமை இரவு வரை மழை தொடர்பான விபத்துக்களில் 76 பேர் பலியாகினர். அதில் பைசாபாத், உன்னாவ் பகுதியில் 8 பேர், கோண்டா, ராம்பூரில் தலா 2 பேர், அவுரியா, ஹர்டோய், மீரட், இடா, கவுஷாம்பி, காசிப்பூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 18 பேர் மழைக்கு பலியாகினர்.

உ.பி.யில் ஓடும் பல ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தனர்.