ரன்புர்

த்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயம் பருகி 92 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

வட இந்திய மாநிலங்களான உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தர காண்ட் மாநிலங்களில் கள்ளசாராய வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக மீரட், சரன்பூர் ரூர்கீ மற்றும் குஷிநகர் ஆகிய இடங்களில் கள்ளசாராய வர்த்தகம் தடையின்றி நடந்து வருவது குறித்து பலமுறை புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.

புகார்கள் வந்ததும் சோதனை நடப்பதும் மீண்டும் சாராய விற்பனை நடப்பதும் வழக்கமாகி விட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் பருகிய பலர் மரணம் அடைந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 92 பேர் மரணம் அடைந்துள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் மீரட் பகுதியில் 18 பேர், சாரன்பூர் பகுதியில் 46 பேர், ரூர்கியில் 20 பேர் மற்றும் குஷிநகர் பகுதியில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது குறித்து அதிக மரணம் அடைந்ததாக கூறப்படும் சரன்பூர் மாவட்ட நீதிபதி அலோக் பாண்டே, “கள்ளச்சாராயத்தால் இப்பகுதியில் 46 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பிரத பரிசோதனையில் அவர்களில் 36 பேரின் மரணத்துக்கு கள்ளச் சாராயம் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ளோரின் மரணத்துக்கான சரியான காரணம் இனி தெரிய வரும். கள்ளசாராயம் பருகிய 40 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில் 400 லிட்டர் கள்ளசாராயம் பிடிபட்டுள்ளது. 30 பேர் கைது செய்யப்பட்டுள்ள்னர். சோதனை இன்னும் தொடர்கிறது.”என தெரிவித்துள்ளார்.