Random image

உத்தரகாண்ட்: இந்தியா-அமெரிக்க ராணுவ கூட்டு பயிற்சி தொடக்கம்

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் சவுபாட்டியாவில் இந்தியா-அமெரிக்க ராணுவ கூட்டு பயிற்சி தொடங்கியுள்ளது.

அமெரிக்க ராணுவ முதல் நிலை படைப்பிரிவு உள்ளிட்ட 4 படைபிரிவுகளும், இந்திய ராணுவத்தின் கருடா படைப்பிரிவு, சூர்யா படைப்பிரிவு என மொத்தம் 4 படைபிரிவுகளும் யுத் அபியாஸ் 2018 என பெயரிடப்பட்ட இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

இரு தரப்பையும் சேர்ந்த நவீன தொலைத்தொடர்பு கருவிகள், கண்காணிப்பு கருவிகள், வெடிகுண்டுகளை கண்டறிம் கருவிகள் போன்றவை பயிற்சியின் போது பயன்படுத்தப்பட உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் இடங்களில் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் கூட்டு பயிற்சிகளில் இவர்கள் ஈடுபடவுள்ளனர்.

2 வாரங்கள் நடைபெறும் இந்தர் பயிற்சியில் இரு நாட்வு ராணுவ நிபுணர்களின் அனுபவங்கள் பரஸ்பர முறையில் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.