டேராடூன்:

த்ரகாண்ட் முதல்வராக  ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் திரிவேந்திர சிங் ராவத்  பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 12ம் தேதி கூடிய பாஜக ஆட்சி மன்ற கூட்டத்தில், முதல்வர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. திரிவேந்திர சிங் ராவத், சத்பால் மகாராஜ்  ஆகிய இருவரில் ஒருவர் முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று யூகச் செய்திகள் வெளியாகின. ஆனால் அன்று எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்று டேராடூனில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூடி புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். ஆர்.எஸ். எஸ். பிரமுகரான திரிவேந்திர சிங் ராவத்  முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட  உள்ளார்.

 

“இன்று (வெள்ளிக்கிழமை ) கூடும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் , உத்ரகாண்ட் சட்டமன்றக்குழு தலைவராக என்னை தேர்ந்தெடுப்பார்கள்.

பாஜக பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே, பொறுப்பாளர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநில தேர்தல் மற்றும் பொறுப்பாளர் பி.ஜே.பி-ன் மாநில ஷியாம் ஆகியோர் இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக கலந்துகொள்ள இருக்கிறார்கள்” என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“புதிய அமைச்சரவையின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நாளை (18ம் தேதி) டேராடூனில் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில்  பிரதமர் நரேந்திர மோடி, கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் பல மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள்” என்று, உத்ரகாண்ட் மாநில பாஜக தலைவர் அஜய் பாத் தெரிவித்தார்.

56 வயதான திரிவேந்திர சிங் ராவத்,  1983 முதல் 2002 வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாக செயல்பட்டார். பிறகு பாஜக கட்சிப்பணிக்கு அனுப்பப்பட்டார்.