உத்தரபிரதேசம்: தலித் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் 5 வாலிபர்கள் கைது

லக்னோ:

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 17 வயது தலித் சிறுமி குடும்ப பிரச்னை காரணமாக வீட்டை விட்டு கடந்த 16ம் வெளியேறினார். அவரது ஆண் நண்பரான குல்தீப் கவுதம் மற்றும் இவரது நண்பர்கள் ஜெய்சிங், ரஜ்னிஷ் கவுதம், அனில் ராவத் ஆகியோரிடம் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்த கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

இடம் ஏற்பாடு செய்து தருவதாக கூறி 4 பேரும் அந்த பெண்ணை காரில் கடத்தி சென்றனர். குர்சி சாலையில் கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் ஒரு கட்டடத்தில் வைத்து அந்த பெண்ணை 4 பேரும் மாறி மாறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அங்கேயே அவர் 24 மணி நேரம் சிறை வை க்கப்பட்டிருந்தார்.

பின்னர் அந்த பெண்ணை குடம்பா பகுதியில் உள்ள மற்றொரு நண்பராஜ ரவி சர்மா என்பவரது வீட்டில் இறக்கிவிட்டனர். ரவி சர்மா வீட்டில் சிறை வைக்கப்பட்ட அந்த பெண் பல முறை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார். கடந்த 19ம் தேதி அன்று அவர்கள் பிடியில் இருந்து தப்பி வந்த அந்த பெண் நடந்த விஷயங்களை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து 5 வாலிபர்களையும் நேற்று கைது செய்துள்ளனர். பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.