உத்தரபிரதேசம்: எருமை திருடிய சந்தேகத்தில் வாலிபர் கும்பலால் அடித்து கொலை

லக்னோ:
உத்தரபிரதேசத்தில் எருமை திருடியதாக எழுந்த சந்தேகத்தில் கிராம மக்கள் கும்பலாக தாக்கியதில் வாலிபர் இறந்தார்.

உத்தரபிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாருக் (வயது 22). துபாயில் டைலர் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் ஊர் திரும்பினார்.

இந்நிலையில் நேற்றிரவு இவர் தனது நண்பர்களுடன் போலாபூர் ஹதோலியா கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தார். இவர்களை பார்த்த அந்த கிராம மக்கள் எருமை திருடர்கள் என நினைத்து சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். ஷாருக் நண்பர்கள் தப்பியோடினர். ஷாருக் மட்டும் அவர்களிடம் சிக்கி கொண்டார். அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த 4 பேரை கைது செய்தனர். 15க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். எருமை திருடியதாக கிராமத்தினரும் ஷாருக் மற்றும் நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளார். பிரேத பரிசோதனையில் ஷாருக்கு உடலில் அதிகளவில் உள்காயம் இருந்தது தெரியவந்துள்ளது.