வேலூர்: மாங்காய் லோடு லாரி கவிழ்ந்து 10 பேர் பலி

வேலூர்:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே குப்பம் பகுதியில் இருந்து தமிழகத்துக்கு மாங்காய் லோடு ஏற்றிய மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

தொழிலாளர்கள் சிலர் லாரியின் மேற்புறத்தில் உட்கார்ந்து பயணம் செய்தனர். கங்குந்தி வனப் பகுதியில் லாரி வந்த போது திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் லாரியில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர், லாரிக்கு அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடக்கிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.