கொச்சினில் நிறுத்தப்பட்டிருந்த விமானந்தாங்கி போர்க்கப்பலில் நடந்தது என்ன?

புதுடெல்லி: கொச்சின் கப்பல்துறையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் முக்கிய உபகரணங்கள் திருடப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் போர்க்கப்பலின் ஹார்ட் டிஸ்க் மற்றும் மல்டி ஃபங்க்சன் கண்ட்ரோல்(எம்எஃப்சி) செயலி ஆகியவை திருடப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பான விசாரணை நடந்துவரும் நிலையில், இதுகுறித்து கருத்து கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், கப்பலில் நடந்துள்ள திருட்டு மற்றும் சேதப்படுத்தல் சம்பவங்கள் ஒரு உள்ளார்ந்த நிகழ்வு என்றும், கப்பலில் பணியாற்றும் யாரே ஒருவர்தான் இதை செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

கப்பலில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் அல்லது ஏதேனும் தீவிரவாத செயல்பாடுகள் இருக்கிறதா? என்று ஆராய்ந்துவரும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த இடத்தின் பாதுகாப்பு தனியார் பாதுகாப்பு படைகள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், விசாரணை பொறுப்பு மாநில காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சேதப்படுத்தப்பட்ட டிஸ்க் ‍தேசியப் பாதுகாப்பதொடர்பான பல முக்கிய தகவல்களைக் கொண்டது என்றும், எனவே, இதை செய்தது கப்பல் சார்ந்த நபரா? இல்லையா? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.