தடையைமீறி ஜல்லிக்கட்டு: விசிலடித்து சீமான் உற்சாகம்!

மதுரை,

துரை அருகே, தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினார். விசிலடித்து ஜல்லிக்கட்டு போட்டியை உற்சாக கண்டுகளித்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி தான் சொன்ன வாக்கை நிறைவேற்றி விட்டார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.

பீட்டா தொடர்ந்த வழக்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உச்சநீதி மன்றம் தடைவிதித்திருந்தது. இந்த ஆண்டு எப்படியும் ஜல்லிக்கட்டு நடை பெற்றே ஆக வேண்டும், நடத்தியே தீருவேன் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சூளுரை மேற்கொண்டார்.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியினர் ஜல்லிக்கட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்தி விட்டனர்.

சீமான் ஏற்கனவே சொன்னபடி, மதுரை மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தி பரிசும் வழங்கினார்.

கடந்த 16-ம் தேதி மதுரை வந்த சீமான், அங்கு ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்தார். ஆனால், இளைஞர்களோ  ‘அரசியல்வாதிகள்  எங்கள் போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம்’ என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

தொடர்ந்து கடந்த   17-ந் தேதி நாம் தமிழர் கட்சியினர் தனியாக போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய சீமான், “வருகிற 21-ம் தேதி (இன்று) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தாமல் இங்கி ருந்து செல்ல மாட்டேன்”  அதுவரை மதுரையில் போராட்டம் நடத்துவேன் என்று அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து இன்று காலையிலேயே மேலூர் அருகே உள்ள கீரிப்பட்டி மலைப்பகுதியில் வெற்றிகரமாக  ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமானது. போட்டியை விசிலடித்து உற்சாகமாக கொண்டாடினார். போட்டி முடிந்ததும் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசும் வழங்கிவிட்டார் அசத்திவிட்டார் சீமான்.

போலீசார்  சீமானை எதிர்பார்த்து  அலங்காநல்லூர் பகுதியில் காத்திருக்க, அவர் போலீசாரை ஏமாற்றிவிட்டு, வேறு இடத்தில்  ஜல்லிக்கட்டை நடத்திவிட்டார்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில், அதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியினர் மிக ரகசியமாக மேற்கொண்டு வந்தததாவும்,  மாடு வளர்ப்பவர்களிடமும், மாடு பிடி வீரர்களுக்கு மட்டும் தகவல் சொல்லி வரவழைத்து ஜல்லிக்கட்டு நடத்தி, அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி கவுரவப்படுத்திவிட்டார்.

சீமானின் இந்த வெற்றி போராட்டம் இளைஞர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த 12ந்தேதி நாம் தமிழர் கட்சியினர் கடலூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி கைதாகியது குறிப்பிடத்தக்கது.