ஐபிஎல் : ஹைதராபாத் சன்ரைசர்ஸ் நான்காவது வெற்றி!

In Wednesday’s match against Delhi Daredevils, SRH issued a warning for the other teams by showing how strong is their bench strength

 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நான்காவது வெற்றியை நேற்று பதிவு செய்தது.

 

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஹைதராபாத்தும் டெல்லியும் மோதின. ஹைதராபாத் அணியில் புதிதாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், வில்லியம்சன் களமிறக்கப்பட்டிருந்தனர். டெல்லி அணியில் முகமது ஷமிக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் இடம் பெற்றார்.

 

‘டாஸ்’ ஜெயித்த ஹைதராபாத் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். வார்னரும், தவானும் இறங்கினர். 4 ரன்னில் வார்னர் கேட்ச் ஆக, தவானுடன், வில்லியம்சன் இணைந்தார். தவான் ஆமை வேக ஆட்டத்தைக் காண்பித்தாலும் மறுமுனையில் விளாசினார் வில்லியம்சன். 89 ரன்களில் வில்லியம்சனும் (51 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) 70 ரன்களில் தவானும் (50 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்க, அடுத்த வந்த யுவராஜ், சிக்சராக கிளப்புவார் என பார்த்தால், 3 ரன்னில் போல்டானார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் 4 விக்கெட்டுகளையும் கிறிஸ் மோரிஸ் கைப்பற்றினார்.

 

அடுத்து ஆடிய டெல்லி அணியின் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் ஸ்ரேயாஸ் அய்யரும், மேத்யூசும் இணைந்து அணியை கரைசேர்க்க முயன்றனர். ஆனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 176 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்கள் (31 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தும் பயனில்லை.

 

இதன் மூலம் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு நான்காவது வெற்றி. இந்த வெற்றிகளை உள்ளூர் மைதானத்திலேயே ஹைதராபாத் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 5-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லிக்கு இது 3-வது தோல்வி.

 

Leave a Reply

Your email address will not be published.