ஜெய்ப்பூர்;

மேற்கு ராஜஸ்தான் பகுதியில் சலூன் கடைகளில் நிலவும் சாதிய பாகுபாட்டால், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த 2008-ம் ஆண்டு டாக்ஸி டிரைவரான ஜோகராம் கரேலா என்பவர் தனது 9 வயதுக்குட்பட்ட இரு மகன்களை சலூன் கடைக்கு அனுப்பினார். அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் என்பதால், உயர்சாதி சலூன் கடைக்காரர் அவர்களை மோசானமான வார்த்தைகளால் திட்டி அனுப்பினார்.

இதனையடுத்து ஜோகாரம் கரேலா சாதியத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்.
அவரது 10 ஆண்டு போராட்டத்துக்குப் பின்னர், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் சலூன் கடைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தலித் மாணவர்களுக்கு பள்ளியில் தனித் தட்டு, உயர் சாதி மாணவர்களிடமிருந்து அவர்களை தொலைவில் வைப்பது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உயர் வகுப்பு மாணவனின் சாப்பாட்டுத் தட்டை தொட்ட தலித் மாணவரை ஆசிரியர் அடித்த சம்பவமும் இப்பகுதியில் நடந்துள்ளது.

தலித்துகள் திருமணம் செய்யும்போது திருமண மண்டபம் தர மறுக்கிறார்கள். 2018-ம் ஆண்டு மும்பை என்ஜிஓ-க்கள் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் ஜோகராம் கரேலா புகார் செய்தார்.

இதனையடுத்து, தலித்துகளை சலூன்களில் அனுமதிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்சாதி சலூன்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலித்துகள் நடத்தும் சலூன் கடையையும் மூடுமாறு மிரட்டினர். ஜோகராம் கரேலா தொடர்ந்து நடத்திய சட்டப் போ£ராட்டத்துக்கு பிறகு 50 சதவீத சலூன் கடைகளில் தற்போது தலித் சமுதாயத்தினர் அனுமதிக்கப்டுகின்றனர்.