நேற்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி யின் இரு உலக சாதனைகள்

வுதாம்ப்டன்

நேற்றைய உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் தோனி இரு உலக சாதனைகள் புரிந்துள்ளார்.

நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை இந்தியா வெற்றி பெற்றது.   இதில் 122 ரன்கள் அடித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கபட்டார்.   அதைப் போல் பும்ரா மற்றும் ரபடா ஆகியோர் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்னும் புகழை பெற்றனர்.

அதே சமயத்தில் தோனியும் இந்த ஆட்டத்தில் இரு உலக சாதனைகளை நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வ தேச போட்டிகளில் தோனி நேற்றைய போட்டியுடன் 600 போட்டிகளில் விக்கட் கீப்பராக இருந்துள்ளார்.   இது முதல் உலக சாதனை ஆகும்.

அதிக அளவில் விக்கட் கீப்பர்களாக இருந்தவர்கள் விவரம் இதோ

தோனி                                  600 போட்டிகள்

பவுச்சர்                                596 போட்டிகள்

சங்ககாரா                          499 போட்டிகள்

கில்கிறிஸ்ட்                       485 போட்டிகள்

அது மட்டுமின்றி உலகக் கோப்பை போட்டிகளில் தோனி அதிகம் அவுட் செய்த பவுலர்களில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி அடுத்த சாதனை புரிந்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளில் அதிகம் அவுட் செய்த பவுலர்கள்

சங்ககாரா                          54

கில்கிறிஸ்ட்                       52

தோனி                                  33

மெக்கலர்ன்                        32

பவுச்சர்                                31

இவ்வாறு ஒரே போட்டியில் இரு உலக சாதனைகளை தோனி புரிந்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி