டில்லி:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் இதுவரை தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.

இந்த நிலையில், ஏப்ரல் 2ந்தேதி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறைந்த பட்ச வருமானம் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 குறைந்த பட்ச வருமானம் அளிக்கப்படும் என்றும், வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வரை வழங்கப்படும் என்றும்  அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதை நடை முறைப்படுத்த முடியும் என்று முன்னாள்  ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜனும் கருத்து தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேலும் பல சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஏப்ரல் 2ந்தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை டில்லியில் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.