7எம்பிக்கள் சஸ்பெண்டு: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா

டெல்லி:

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 7 காங்கிரஸ் எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

டெல்லிவன்முறை தொடர்பாக விவாதிக்க கோரி நாடாளுமன்றம் கடந்த சில நாட்களாக அமளிதுமளிப்பபட்டு வருகிறது. எந்தவொரு விவாதமும் நடைபெற முடியாத நிலையில் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சபையில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக தமிழக எம்.பி. மாணிக்தாகூர் உள்பட 7 பேரை சபாநாயகர் ஓம்பிர்லா இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இதை கண்டித்து,  நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 7 எம்பிக்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.