“நான் தற்கொலைக்கு தூண்டினேனா…” : லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்

சென்னை:

ஸீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனால் நாகப்பன் என்பவர் தற்கொலை செய்துகொண்டதாக எழுப்பப்படும் புகார் உண்மையல்ல என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் மனைவியை விட்டு பிரிந்து மைத்துனியுடன் குடும்பம் நடத்திவந்தார். அவர் தனது மகள் போன்ற பெண்களிடம் தவறாக நடக்கிறார் என்ற புகார்களுடன் அண்மையில் ஸீ தமிழ் டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.

a

இந் நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமிராமகிருஷ்ணன், நாகப்பனை மிக மோசமாக பேசியதாகவும் அதனால் அவர் தெற்கொலை செய்துகொண்டதாகவும் நாகப்பன் மகள் ராதிகா போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், “

என் மீது இப்போது புகார் அளித்திருக்கும்  ராதிகா, அந்த நிகழ்ச்சி முடிந்ததும் என்னுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.  அந்த நிகழ்ச்சியில் நாகப்பனின் மனைவி அம்பிகா தான் நாகப்பனை அதிகமாக வசைபாடினார்.

நாகப்பனின் மரணம் வருத்தம் அளிக்கிறது. அதே நேரம்  அவரால் 5 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் நிகழ்ச்சிக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுவதே என் கடமை. நாகப்பன் மீது காவல்துறையில் புகார் தெரிவியுங்க் என்று மட்டுமே சொன்னோம். மற்றபடி நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அவரது மரணத்தக்கு நானோ, நிகழ்ச்சியோ காரணண் அல்ல” என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.