இந்திய ஒருநாள் அணியில் அஸ்வினை இணையுங்கள் – ஆஸ்திரேலிய வீரர் கோரிக்கை

கான்பெரா: இந்திய ஒருநாள் அணிக்குள், ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினை கொண்டுவர வேண்டுமென்று கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக்.

அவர் கூறியுள்ளதாவது, “நிச்சயமாக அஸ்வினை, இந்திய ஒருநாள் அணிக்குள் கொண்டுவர வேண்டும். அவ்வாறு அஸ்வின் அணிக்குள் வந்தால் மிகப்பெரிய பலமாக மாறும்.

நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர் அஸ்வின். பந்துவீச்சிலும் கட்டுக்கோப்பாக வீசி, எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார். குறிப்பாக, டாப்ஆர்டர் பேட்ஸ்மென்களுக்கு எதிராகவே சிறப்பாக பந்துவீசக்கூடியவர் அஸ்வின். எந்தப் போட்டியானாலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர்.

கட்டுக்கோப்பாக பந்துவீசக்கூடியவர் அஸ்வின். அவருக்கு நிச்சயம் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பளிக்க வேண்டும்” என்றுள்ளார் அவர்.