குஷ்பு, கார்த்த சிதம்பரம் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 122 பேர் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்

குஷ்பு – கார்த்தி

மிழக காங்கிரஸ். நிர்வாகிகள் 122 பேர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எனப்படும் ஏ.ஐ.சி.சி. க்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள்   பட்டியல் நேற்று இரவு டில்லியில் வெளியிடப்பட்டது. 122 பேர் கொண்ட் இந்தப் பட்டியலை காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி தேர்தல் பிரிவின் தலைவர் முள்ளுப்பள்ளி ராமச்சந்திரன் வெளியிட்டார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், குமரிஅனந்தன், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்புவு  ஆகியோர்க்கு இந்த பட்டியலில் அடங்குவர்.

’ராகுல் காந்தி தலைவர் ஆனதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டிய முக்கியமான உறுப்பினர்களைக் கொண்டதுதான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.