சென்னை:

ஜெயலலிதா  வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் வருமானவரி சோதனை நடந்துகொண்டிருக்கம் சூழ்நிலையில், அந்த இல்லத்துக்கு வெளியே சாலையில் மறியல் செய்ய முயன்ற அ.தி.மு.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் பகுதியில் இருக்கும் வேதா இல்லத்தில் தற்போது வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

இதைக் கேள்விப்பட்டு அ.தி.மு.க. பிரமுகர்களும் தொண்டர்களும் வீட்டு முன் பெருமளவில் கூடினர். ஒரு கட்டத்தில், அவர்கள் பிரதமர் மோடியை எதிர்த்தும், தமிழக முதல்வர் ஈ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோரை எதிர்த்து முழக்கமிடத் துவங்கினர். பிறகு சாலையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர்.

 

இதையடுத்து அவர்களை கைது செய்வதாகக்  கூறி, காவல் துறையின் தங்கள் வாகனத்தில் ஏற்றினர்.  அவர்களை, சமூகநலத்துறையின் கல்யாண மண்டபத்தல் அடைத்து வைத்தனர்.   அதே நேரம் பல தொண்டர்கள், தாங்கள் அமைதியாக திரும்புவதாகக் கூறவே, அவர்களை காவல்துறையினர் இங்க இருக்கக்கூடாது என்று எச்சரித்து அனுப்புவதும் நடக்கிறது.