தமிழகத்தின் டாஸ்மாக் வருவாய் ரூ.30,000 கோடி: நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்

டெல்லி: தமிழகத்துக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் வருவாய் கிடைத்திருப்பதாக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அறிவித்திருக்கிறார்.

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித்தரக்கூடிய ஒன்று டாஸ்மாக் நிறுவனமும், மதுக்கடைகளும். தமிழக அரசு நடத்தக்கூடிய  மதுக்கடைகள் மூலமாக 2019 – 20 நிதியாண்டில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது.

நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கூறி இருப்பதாவது: தமிழக அரசின் பட்ஜெட்டில் 2 லட்சம் கோடி ரூபாயில் பெரும்பாலான பங்கு டாஸ்மாக் மூலமாகவே கிடைக்கிறது.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மதுபான விலை ஏற்றத்தின் காரணமாக கூடுதலாக வரும் ஆண்டு 2 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் உட்பட 12, 263 கோடி வர வேண்டும். இந்த தொகை வந்தால் மேலும் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தலாம். வரவை விட செலவு அதிகம் இருப்பதால், வருவாய் பற்றாக்குறை உயர்ந்து கொண்டே போகிறது என்றார்.

கார்ட்டூன் கேலரி