நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மை எதிரொலி: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவு

நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாத காரணத்தால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,171 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணை பகுதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முதல் மழை குறைந்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர் அளவு குறைந்துள்ளதோடு, நீர்வரத்தும் வினாடிக்கு 5,699 கன அடியிலிருந்து 4,171 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் 52.97 கன அடியாகவும், நீர் இருப்பு 19.37 டி.எம்.சியாகவும் உள்ளது.