டில்லி

த்திய அரசு புதிய நேரடி வரிச்சட்டம் கொண்டு வந்து தற்போதுள்ள வருமானவரிச் சட்டத்தை மாற்ற உத்தேசித்துள்ளது

மறைமுக வரிகளை தற்போது ஜி எஸ் டி மூலம் மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.   பல பொருட்களுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த எக்சஸ் டூடி, வாட் போன்றவைகள் நீக்கப் பட்டு தற்போது ஜி எஸ் டி மட்டும் விதிக்கப் படுகிறது.   ஒரு பொருள் ஒரே வரி என்னும் கொள்கையின் படி இந்த வரிவிகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இன்று நேரடி வரிச்சட்டங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு ஒரு குழு அமைத்துள்ளது.   அந்தக் குழு விரைவில்  ஒரு புதிய சட்ட வரைவை மத்திய அரசுக்கு அளிக்கும் எனவும் அதைத் தொடர்ந்து தற்போதுள்ள வருமான வரிச் சட்டம் மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளது.  தற்போதுள்ள வருமான வரிச்சட்டம் 1961 முதல் நடைமுறையில் உள்ளது.

இந்தக் குழுவில் அர்பிந்த் மோடி, கிரீஷ் அஹுஜா, ராஜிவ் மேமானி, முகேஷ் படேல் மான்சி கேடியா மற்றும் ஜி சி ஸ்ரீவத்சா ஆகியோர் உள்ளனர்.   அர்பிந்த் மோடி இந்த குழுவுக்கு தலைமை வகிக்கிறார்.    இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்தக் குழு நேரடிச் சட்ட வரைவை அரசுக்கு அளிக்கும் என இந்தக் குழுவின் தலைவர் அர்பிந்த் மோடி கூறி உள்ளார்.

இதே போல புதிய நேரடி வரிச் சட்டம் ஒன்றை கொண்டு வர முன்னாள் நிதி அமைச்சர் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.