வருமான வரி கணக்கு தாக்கல் 71 சதவீதம் அதிகரிப்பு

டில்லி:

வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 71 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாளாக அறிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த வகையில் நேற்றுடன் கால அவகாசம் முடிந்தது. இதுவரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையை வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 71 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆன்லைன் மூலம் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 3.17 கோடி பேரும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 5.42 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். வெள்ள பாதிப்பு காரணமாக கேரளாவுக்கு மட்டும் செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.