3 மாதத்தில் 1.96 கோடி பான் கார்டுகள் விநியோகம்…வருமான வரித் துறை

டில்லி:

வருமான வரி செலுத்துவதற்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும் 10 இலக்க எண்கள் கொண்ட பான் கார்டை வருமான வரித் துறை வழங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 1.96 கோடி பான் கார்டுகளை வருமான வரித் துறை வழங்கியுள்ளது. இதன் மூலம் பான் கார்டு பெற்றவர்களின் எண்ணிக்கை 37.9 கோடியாக உயர்ந்துள்ளது.

பான் கார்டு பெற்றுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் மூலம் வரி செலுத்துவோரது எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 35.94 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தில் 37.9 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் தனி நபர்களுக்கு 97.46 சதவீதமும், நிறுவனங்களுக்கு 1.08 சதவிதமும், இந்து கூட்டு குடும்பங்களுக்கு 0.5 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.