ஆதார் எண் மூலம் உடனடி பான் கார்டு பெறும் திட்டம் தொடக்கம்

டில்லி:

ஆதார் எண்ணை கொண்டு உடனடியாக பான் கார்டு என்ற நிரந்தர வருமான வரி கணக்கு எண் அட்டை வழங்கும் திட்டத்தை வருமான வரித் துறை தொடங்கியுள்ளது. ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பர் மூலம் பான் கார்டை பெறலாம்.

செல்போன் நம்பர் மூலம் ஆன்லைன் வழியாக பதிவு செய்தால் ஓடிபி மூலம் சரிபார்ப்பு முடிந்து உங்களுக்கான பான் கார்டு எண் செல்போன் வழியாக வந்துசேரும்.

ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், வயது, பாலினம் மற்றும் முகவரி பான் கார்டிலும் இணைக்கப்படும். இந்த சலுகை தனிநபர் வருமான வரி கணக்கு தொடங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அறக்கட்டளைகள், நிறுவனங்கள், மற்றும் இந்து கூட்டு குடும்பம் போன்ற இதர பிரிவினருக்கு இந்த சலுகை பொருந்தாது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செல்போன் மூலம் பெறப்பட்ட பான் கார்டு எண்ணை பயன்படுத்த தொடங்கிய பின்னர் பான் கார்டு தபால் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும். இந்த திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அமலில் இருக்கும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த திட்டம் யெல்படுத்தப்படுகிறது.