கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் 40% வேதாந்தா பங்குகள் விற்பனை….வருமான வரித்துறை நடவடிக்கை

மும்பை:

நிலுவை வரியை வசூல் செய்யும் வகையில் வேதாந்தா நிறுவனத்தில் கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் வைத்திருந்த 40 சதவீத பங்குகளை வருமான வரித் துறை விற்பனை செய்துள்ளது. ரூ.10,247 கோடி முந்தைய வரி நிலுவையை வசூல் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலுவை வரி தொடர்பாக கெயர்ன் நிறுவனம் சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளது. அதன் மீதான இறுதி விசாரணை தொடங்கவுள்ள சமயத்தில் வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கெய்ர்ன் நிறுவனம் தரப்பில் கூறுகையில்,‘‘வேதாந்தா நிறுவனத்தில் எங்களுக்கு இருந்த 216 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துவிட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. தற்போது அந்நிறுவனத்தின் 3 சதவீத பங்குகள் மட்டுமே எங்களது கைவசம் உள்ளது. இதையும் வருமான வரித்துறை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.