ரூ.17 கோடி கருப்புப்பணம்! – ஆர் எஸ் எஸ் தலைவரிடம்  கிடுக்கிப்பிடி  விசாரணை

டில்லி,

ஆர் எஸ் எஸ் தலைவர் ரூ17 கோடி கருப்புப் பணம் டெபாசிட் செய்திருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8 ம் தேதி இரவு ரூ.500. 1000 ஆகிய உயர் பணமதிப்பு நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மக்களிடம் இருக்கும் செல்லாப் பணத்தை டிசம்பர் 31க்குள் மாற்றிக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.

கணக்கில் வராத கருப்புப் பணத்தை மாற்ற மத்திய அரசு  PMGKY உள்பட  பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் நடத்திய கருப்புப் பண வேட்டையில் அனைத்துக்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், பினாமிகள், என பல்வேறு தரப்பினர் மாட்டினர்.

கருப்புப் பண வேட்டை தற்போதும் தொடரும் நிலையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸின் டில்லி தலைவர் குல்பூசன் அகுஜா வருமான வரித்துறையினரின் வலையில் சிக்கியுள்ளார். செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ 17 கோடியை நவம்பர் 8 க்கு முன்தேதியிட்டு வங்கியில் டெபாசிட் செய்துள்ளார்.

டில்லி கரோல்பாக், கான்மார்க்கெட், சவுத் எக்ஸ்டேன்சன் ஆகிய முக்கிய இடங்களில்  உள்ள Pashmina shawls என்ற பிரபல ஷோ ரூம் கடைகள் இவருடையவைதான். இதன் இயக்குநர்களாக இவரும், இவரது மகன்களான புவன், கரன், மருமகள் நிதி ஆகியோர்  உள்ளனர். இவர் இளம் வயதிலிருந்தே ஆர் எஸ் எஸ் -ல் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட  17 கோடி ரூபாயும் நவம்பர் 8 க்கு முன் நடைபெற்ற வியாபாரத்தில் கிடைத்த வருமானம் என  போலியான ஆவணங்களை கொண்டு கணக்குக் காட்டியிருப்பதாக  வருமான வரித்துறையினர் கூறினர். இந்தத் தொகையில் 6 கோடி ரூபாய்  PMGKY திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வருமானவரித்துறையினர்  தெரிவி த்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.