சென்னை:
திமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கல்வியாளருமான ஜெகத்ரட்சகன் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை  நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் மருத்துவக் கல்லூரி, மதுபானை ஆலைகள், புதுச்சேரி வீடு உள்பட 40 இடங்களில் இன்று காலை முதல் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, 2011ம் ஆண்டு மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை பிரதமர் அலுவலக இணைய தளத்தில் வெளியிட்டனர். ஆனால் அப்போது இணை அமைச்சராக இருந்த ஜெகத்ரட்சகன் தனது சொத்து விவரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் தில்லுமுல்லு மற்றும் அவரது பல கல்லூரிகளில் வருமான வரி ஏய்ப்பு நடைபெற்றதாக வந்துள்ள தகவலை அடுத்து சோதனை நடைபெறுவதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.