வேலம்மாள் கல்வி குழுமத்துக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

--

சென்னை:

பிரபல கல்வி நிறுவனமான வேலம்மாள் கல்வி குழுமத்துக்கு சொந்தமான  சென்னை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரி ஏய்ப்பு புகார்களைத் தொடர்ந்து, முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்வி குழுமத்துக்கு சொந்தமான, , சென்னை, காஞ்சிபுரம், தேனி, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

. வேலம்மாள் குழுமத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சோதனை இன்னும் 2 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

வேலம்மாள் கல்விக்குழுமத்துக்கு ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் உடன்   பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.