சத்துணவு திட்டத்துக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை:

மிழக அரசு நடத்தி வரும் சத்துணவு திட்டத்துக்கு  முட்டை, பருப்பு விநியோகிக்கும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 70 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி போன்ற அரசு சார்ந்த திட்டங்களுக்கு உணவு பொருட்களை கிருஷ்டி ஃபிரைடுகிராம்  என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இதில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

கிருஷ்டி ஃபிரைடுகிராம்  நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று நாமக்கல், கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  மொத்தம் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.