ஜேப்பியார் கல்வி குழுமங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சென்னை

ஜேப்பியர் கல்வி குழுமத்துக்கு சொந்த மான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரி துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு இதுபோன்று அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவனங்கள், மற்றும் பணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும்,  சென்னையில் உள்ள ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரிகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ஜேப்பியார் ஆவார். சத்தியபாமா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் ஜோசப் பொறியியல் கல்லூரி, சத்யபாமா பொறியியல் கல்லூரி, புது கல்லூரி, செயின்ட் மேரீஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பூந்தமல்லியில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரி, பனிமலர் பாலிடெக்னிக் என ஜேப்பியார் பல கல்வி நிறுவனங்கள் இந்த குழுமத்தின் கீழ்  செயல்பட்டு வருகிறது.

இந்த கல்வி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த தகவலைத்தொடர்ந்து, வருமான வரித்துறையினர், ஜேப்பியார் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில்  இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி