சென்னை:

சென்னை மற்றும் நாமக்கல்லில் செயல்பட்டு வரும்  தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்த மான 7 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனம் தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் ஏராளமான கட்டிட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் வரும் 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், பல இடங்களில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில், இன்று, தமிழக பொதுப்பணித்துறை கண்டிட காண்டிராக்டருக்கு சொந்தமான  சென்னை மற்றும் நாமக்கல்லில் உள்பட  அவர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மற்றும் சென்னையில்  உள்ள பிஎஸ்கே எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் அவர்களின் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிறுவனங்கள் மட்டுமே  உயர் கல்வித் துறையிலுள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் மேல் ஏகபோக உரிமை வைத்திருக்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தவிர வேறு எந்த நிறுவனமும் அரசாங்க கல்லூரி கட்டடங்களை கட்டியெழுப்ப முடியாது. அந்த அளவுக்கு தமிழக அரசுடன் நெருக்கமான நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் முதலாளிகள்  தமிழக முதல்வருக்கு எடப்பபாடிக்கும்  நெருக்கமானவர்கள் என்பதும்,  தமிழக பொதுப்பணித்துறையின் கீழ் வரும் அனைத்து கட்டிப்பணிகள்,  நெடுஞ்சாலை களை டெண்டர் எடுத்து வரும் நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனங்களில்  வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக என்ற கோணத்தில் சோதனை நடைபெற்று வருவதாகவும், மேலும் தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி உள்பட பல இடங்களில் தனியார் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பிஎஸ்கே நிறுவனத்தின் முதலாளி ஆர். பெரியசாமி.

நாமக்கல்லை அடுத்த நடுக்கோம்பையில், பிஎஸ்கே உரிமையாளர் பெரியசாமியின் வீடு, அலுவலகத்தில் 5 அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமக்கல்-சேலம் சாலையில், பிஎஸ்கே நிறுவனத்தோடு தொடர்புடைய செல்வம் என்பவரது அலுவலகத்திலும் 3 அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது.

இந்த சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில், ஆகாஷ் பாஸ்கரன் ((Akash Baskaran)) சுஜய் ரெட்டி ((Sujai Reddy)) ஆகிய 2 ஃபைனான்சியர்களின் வீடுகள் உள்ளிட்ட 11 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

தேர்தலில் பயன்படுத்துவதற்காக, கணக்கில் காட்டப்படாத பணம் கொண்டுசெல்லப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே  கோவை -திருச்சி சாலையில் உள்ள சீரோ கிராவிட்டி போட்டோகிராப் நிறுவனத் தில், கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். நிறுவனத்தின் உரிமையாளரும் வெளியூரிலிருந்து வந்துள்ளதால், சோதனை பல மணி நேரம் நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்று தமிழகம் முழுவதும் மொத்தம் 18 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.