Random image

சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டு

சென்னை:

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான எஸ்பிகே கட்டுமான குழுமத்தில் வருமான வரிதுறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

எஸ்.வி.கே நிறுவனத்துக்கு சொந்தமான  10க்கும் மேற்பட்ட  இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் சத்துணவுக்கு திட்டத்துக்கு முட்டை வழங்கி வந்த நிறுவனமான கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அவரது நண்பரின் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இந்த நிலையில்  பிரபல எஸ்பிகே கட்டுமான நிறுவனத்திலும்  வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சென்னையில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்பிகே நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.