டில்லி போக்குவரத்து துறை அமைச்சர் வீட்டில் ‘ஐடி ரெய்டு’

டில்லி:

டில்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்வவர் கைலாஷ் கெலாட். அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 16 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லி மாநிலத்தில் ஆம்ஆத்மி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே அதிகார மோதல்கள் நீடித்து வருகின்றன. இந்த நிலையில்,  அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து, வருவாய், தொழில்நுட்பம், நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சராக இருந்து வருபவர் கைலாஷ் கெகால்ட்.

இவரது டில்லி மற்று குருகிராம் பகுதியில் உள்ளது. இன்று காலை திடீரென வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கைலாஷ் கெலாட்டுக்கு சொந்தமான  16 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மத்திய அரசின்  அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.