வருமான வரித் துறை ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு….புதிய உத்தரவு

டில்லி:

வருமான வரித் துறை ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

வருமான வரித் துறை ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘’வருமான வரித் துறை அலுவலங்களை உயர்தர நடத்தை மற்றும் நல்லொழுக்கம் நிறைந்த பணியிட சூழலை பராமரிக்க முடிவு செய்துள்ளது. அதனால், முறைசாரா (இன்ஃபார்மல்) ஆடைகளை அலுவலகத்துக்கு உடுத்தி வருவதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக இளைஞர்கள் அலுவலகத்திற்கு ஆடை கட்டுப்பாடு இல்லாமல் இஷ்டத்திற்கு ஆடை அணிந்து வருவதை ஏற்க முடியாது. இதை பின்பற்றாத ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து கட்டாயம் வெளியேற்றப்பட்டு ஆடை மாற்றி வர வலியுறுத்தப்படுவார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி