வருமான வரி தாக்கல் 2 மடங்கு உயர்வு

சென்னை:

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது. அதிகமாகச் செலுத்திய வரியைத் திரும்ப பெறுவோர் எண்ணிக்கையும் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 2017&-2018 ஆண்டில் தாக்கல் செய்தவர்களை விட 3 கோடியாக உள்ளது.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதிகமாகச் செலுத்திய வரியைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையும் கடந்த ஆண்டைவிட 81 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு 57,551 கோடி ரூபாயை வரி செலுத்தியவர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.தற்போது 77,700 கோடி ரூபாயைத் திரும்பக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.