ஐதராபாத்:

மக்களுக்கு சுமையாக உள்ள வருமான வரியை ஒழிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் சுப்ரமணியன் சாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நடுத்தர குடும்பத்தினருக்கும், சுயதொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கும் வருமான வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் மிக மிகக் குறைவு. மக்கள் ஏன் வருமான வரி என்னும் சுமையை சுமக்க வேண்டும்?. அதனால் வருமான வரியை ஒழித்துக் கட்ட வேண்டும்.

அவ்வாறு செய்தால் அதிக அளவில் சேமிப்புகள் உருவாகும். முதலீடுகள் பெருகி நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால் இழக்கும் தொகையைவிட மறைமுக வரி மூலம் அரசுக்கு அதிக தொகை கிடைக்கும்.

மேலும் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என காத்திருப்பில் உள்ள அலைக்கற்றையை ஏலம் விடலாம். நிலக்கரி சுரங்கத்தையும் ஏலம் விடலாம். இதன் மூலம் அதிக தொகை கிடைக்கும்’’ என்றார்.