அரசியல் உள்ளோக்கத்தினால் வருமானவரி சோதனை: நாஞ்சில் சம்பத்

சென்னை:

ரசில் உள்நோக்கத்தினாலேயே ஜெயா டிவி மற்றும் சசிகலா  உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடப்பதாக தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

வி.கே. சசிகலாவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்,  டி.வி.வி. தினகரன் இல்லம்,  சசிகலா – தினகரன் உறவினர்களான திவாகரன், கிருஷ்ணப்பிரியா ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட  பல இடங்களில் இன்று காலை முதல் வருமானவரி சோதனை நடந்துவருகிறது.

இது குறித்து ஏற்கெனவே நாம் செய்திவெளியிட்டிருக்கிறோம்.

இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்தை தொடர்புகொண்டு பேசினோம்.

அவர், “இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதனால் நாங்கள் அஞ்சிவிட மாட்டோம். தொண்டர்பலம் முழுதும் எங்கள் பக்கம் இருக்கிறது. எங்களை வளைக்க நினைத்த முயற்சி நடக்கவில்லை. இதையடுத்து அரசியல் உள்நோக்கத்துடன் வருமானவரி சோதனை நடக்கிறது. விரைவில் விரிவாக பேசுகிறேன்” என்றார்.