சென்னை:
சென்னை பாரிமுனையில் உள்ள நகைக்கடைகள் உட்பட 8 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர்.
ஹவாலா பணம் மாற்றத்தில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் விடுகளிலும் சோதனை நடத்திப்பட்டது.
கடந்த 8ம் தேதி, திடீரென  500,1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டவுடன், நகைக்கடைகளில் கூட்டம் திரண்டது. மறுநாள் காலை வரை  நகைக்கடையில் குவிந்த மக்கள், பெருமளவு நகைகளை வாங்கிக்குவித்தனர்.
கருப்பு பணம் வைத்திருந்தோரே தங்களிடம் இருந்த பணத்தை தங்கமாக மாற்றியதாக வருமானவரித்துறையினர் கருதினர்.
1இந்த நிலையில், 80ம் தேதியில் இருந்து நகைக் கடைகளின் சி.சி. டிவியை வருமானவரித்துறை கேட்டிருப்பதாக தகவல் பரவியது. அதோடு நகை வாங்கியோரின் பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை கேட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் நகைக்கடை உள்ளிட்ட இடங்களில் நேற்று ரெய்டு நடந்தது. இதனால், கடந்த 8ம் தேதி முதல் கருப்புபணத்தை தங்கநகையாக மாற்றியோரை கண்டறிந்து வருமானழரித்துறை நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதியாகி உள்ளதாக தகவல் பரவியிருக்கிறது.