வரி எய்ப்பு மோசடி: வி.வி.மினரல்ஸ் நிறுவனங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை

சென்னை:

ரி எய்ப்பு மோசடி காரணமாக பிரபலமான மணல் ஏற்றுமதியாளர் வைகுண்டராஜனின் வீடு மற்றும் அவரது  வி.வி.மினரல்ஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

வைகுண்டராஜன்

இந்த சோதனை இன்று 2வது நாளாக தொடந்து வருகிறது. வைகுண்டராஜனின் வீடு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள  அவரது நிறுவன அலுவலகம் மற்றும் குடோன்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில்  சோதனை தொடர்ந்து வருகிறது.

சுமார் 500க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

வைகுண்டராஜனின்  விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு, தூத்துக்குடி, நெல்லை, சென்னை உள்பட மாநிலம் முழுவதும்  பல்வேறு இடங்களில் அலவலகங்கள் உள்ளது.   இந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக முறையான கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வைகுண்டராஜனின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள திசையன்விளை மற்றும்,  தூத்துக்குடி தெற்கு ராஜா வீதியில் உள்ள வி.வி.டைட்டானியம் நிறுவனம், பெரியசாமி நகரிலுள்ள வி.கே. மினரல்ஸ், மற்றும் மத்துவாபுரம், ராஜா யார்டு, தட்டுப்பாறை சந்திப்பு, உடன்குடி, சேந்தபூ மங்கலம், உள்பட ஏராளமான  இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

விவி குரூப்புக்கு சொந்தமான  சென்னை அண்ணாநகர், எழும்பூர், ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், அசோக்நகர், திருவான்மியூர்  அலுவலகங்களிலும் சோதனைநடைபெற்று வருகிறது.