போயஸ்கார்டனில் உள்ள ஜெ., வீட்டில் ஐ.டி. ரெய்டு!!

--

சென்னை:

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் கோடநாடு எஸ்டேட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று இரவு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் 4 பேர் கொண்ட வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையில் சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகர் துணை ஆணையர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.