சரத்குமார் மனைவி ராதிகா நிறுவனத்தில் வருமானவரித்துறை ரெய்டு!

சென்னை,

டிகர் சரத்குமாரின் மனைவியின் நிறுவனமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தி.நகரில் நடிகை ராதிகாவுக்கு சொந்தமான சென்னை தி.நகரில் உள்ள ராடன் மீடியா நிறுவனம் உள்ளது.

இன்று காலை அங்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நடிகர் சரத்குமார் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் அடிப்படையிலும், நேற்று வருமான வரித்துறையினர் நடிகர் சரத்குமாரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்தும், அவரது மனைவி நிறுவனமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

ராதிகா  சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி என பல பிரபலமான தொடர்களை தயாரித்தும், நடித்து வருகிறார்.

இவரது தொடருக்கு தமிழக பெண்களிடையே அமோக வரவேற்பும் உண்டு.

ராடன் மீடியா நிறுவனத்தின்கீழ் ராடான் டிவி என்ற டிவி நிறுவனமும் நடத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது, ஆங்கிலம்,  தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் தொடர்கள் தயாரித்தும், இயக்கியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.