குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் வீட்டில் 2வது நாளாக வருமானவரி சோதனை

சென்னை:

மிழகம் மற்றும் ஆந்திராவில் குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் பல நூறு டன் புகையிலைப் பொருட்கள் பதுக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளிகளுக்கு அருகில் போதைப்பொருள் சாக்லேட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தமிழகம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பான் மசாலா, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் இந்த போதைப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

download (1)

பெரும்பாலான மாநிலங்களில் இந்த பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,  தடையை மீறி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆகவே அரசுக்கு கணக்கு காட்டாமல் முறைகேடான வழியில் குட்கா தயாரிப்பாளர்களிடம் பெரும் பணம் குவிகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

இதையடுத்து, தமிழகம், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 30 இடங்களில் உள்ள பான், குட்கா தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நேற்று நடந்தது.

இந்தச் சோதனையில் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை செய்யப்படும் நிறுவனங்கள், இடைத்தரகர்களின் வீடு, அலுவலகம், குடோன்களில் நடத்தப்பட்ட இந்த  சோதனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள்  கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டன.  இன்று மாலையில் சோதனை முடிந்த பிறகு முழு தகவல்களும் வெளியிடப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

குட்கா, உற்பத்தியாளர்கள், வீடு, குடோன், வருமானவரி சோதனை,