தமிழக தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை! பரபரப்பு
சென்னை,
தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து தற்போது தமிழக தலைமை செயலகமான நாமக்கல் மாளிகையிலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தலைமை செயலாளர் அறையில் சோதனை நடைபெற்று வருகிறது.
இது தலைமை செயலக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரெய்டை தொடர்ந்து தலைமைசெயலகத்தை சுற்றியும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.