வருமான வரி சோதனை: அறிக்கை தயார்! அதிகாரிகள்

சென்னை,

மிழகம் முழுவதும் நேற்று 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்லூரி தலைவர் மற்றும் நடிகர் சரத்குமார், அமைச்சரின் உறவினர்கள், அலுவலகம் போன்ற இடங்களில் சோதனை நடைபெற்றது.

அப்போது ரூ.89 கோடி ரூபாய் அளவுக்கு ஆவனங்கள் சிக்கியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று  நடைபெற்ற வருமான வரி சோதனை விவரங்கள் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு விட்டதாகவும், சோதனையின்போது ரூ.6 கோடி பணம் மற்றும் முக்கிய ஆவனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

இதுகுறித்த அறிக்கை,  இறுதி செய்யப்பட்டு வருகிறது என்றும், இன்று பிற்பகல் இந்த அறிக்கை டில்லிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.