எடப்பாடியின் பினாமிகள்மீதான வருமான வரிசோதனையை தீவிர படுத்த வேண்டும்: ஸ்டாலின்

--

சென்னை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பினாமிகள் மீதான வருமான வரிச்சோதனையை தீவிரப்படுத்தி, கொள்ளையடித்த பணத்தை மீட்க வேண்டும் என்று திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழகம் முழுவதும் அவ்வப்போது வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. மாநில அமைச்சர்களின் பினாமிகளாக சந்தேகப்படும், அரசு ஒப்பந்ததாரர்கள் பலரின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு அரசு ஒப்பந்ததாரர் கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து,  பிரபல மண் மாபியா சேகர் ரெட்டி, முட்டை கொள்முதல் நிறுவனமான கிறிஸ்டி நிறுவனம், தற்போது அரசு சாலைப்பணி ஒப்பந்ததாரன பிஎஸ்கே குழுமம் மீதான ரெய்டு என சோதனைகள் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

கரூர் அன்புநாதன் தொடங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பினாமிகள் மீதான தற்போதையவருமான வரி சோதனை  வரை அனைத்து விசாரணைகளும் சட்டப்படி நடை பெற தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி அவர்கள் கொள்ளை யடித்த கோடிக்கணக்கான பணத்தை அரசின் கஜானாவில் உடனடியாக சேர்க்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.