Random image

பீகார் துணை முதல்வர் சகோதரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை

பாட்னா:

பீகார் துணை முதல்வர் சகோதரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.

பீகார் துணை முதல்வராக இருப்பவர் சுஷில் மோடி. இவரது ஒன்று விட்ட சகோதரியான ரேகா மோடி என்பவது வீடு பாட்னாவில் உள்ளது. இந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

ஸ்ரீஜன் ஊழல் தொடர்பாக இந்த சோதனை நடந்துள்ளது. ரேகா மோடி நகைகள் வாங்கியதற்கு ஸ்ரீஜன் கணக்கு மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.