புதுடெல்லி:

வரி செலுத்துவோருக்கு திரும்பத் தரவேண்டிய தொகையை நிறுத்தி வைக்க வருமான வரித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், ஜிஎஸ்டி மாற்றியமைக்கப்பட்ட பிறகும், 2018-19 ம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி மட்டுமே வருவாய் கிடைக்கும். நேர்முக வரி ரூ. 50 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.12 லட்சம் கோடி வரை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி மூலம் கிடைக்க வேண்டிய வரி குறைந்துபோனதால், வேறு வழியில் ஈடுகட்ட வேண்டியுள்ளது. அதற்காக, கார்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் வரி செலுத்துவோருக்கு திருப்பித் தர வேண்டிய தொகையை நிறுத்தி வைக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தெற்கு மண்டல சாட்டர்டு அக்கவுண்டன்ட் இன்ஸ்ட்டிட்யூட் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த தகவலை மத்திய வருவாய்த்துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே மறுத்துள்ளார். வரி செலுத்துவோருக்கு திருப்பித் தர வேண்டிய தொகையை நிறுத்த மாட்டோம்.

வருவாயை ஈடுகட்ட வரி செலுத்துவோருக்கு தர வேண்டிய தொகையை நிறுத்தி வைப்பது நல்ல யோசனை அல்ல என்று அவர் தெரிவித்தார்.