ஆதார் எண் இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்யலாம்….உயர்நீதிமன்றம்

--

சென்னை:

ஆதார் எண் குறிப்பிடாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நித்யானந்த் ஜெயராமன் உள்பட 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆதார் எண், பான் எண்ணுடன் இணைப்பு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

அதனால் ஆதார் எண் இல்லாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2018&-19ம் ஆண்டின் வருமான வரி கணக்கை ஆதார் எண் குறிப்பிடாமல் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.