2018-19 ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 30ந்தேதி கடைசி நாள்….

சென்னை:  2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை  தாக்கல் செய்யும்  கால அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் கணக்கு தாக்கல் செய்ய வருமான வரி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கடந்த 2018- 19-ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிகழாண்டில் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், கொரோனா தொற்று  லாக்டவுன் காரணமாக, வேலைவாய்ப்பின்றி மக்கள்  கடந்த 6 மாதங்களாக கடுமையான துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக, 2018-19 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்   அறிவித்திருந்தார்.

அதன்படி  ஐடிஆர் (IT Return) தாக்கல் செய்ய நவம்பர் 30ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்தது. அதன்படி ஆண்டுக்கு 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 1000 ரூபாய் அபராதமும், அதற்கு மேல் ஈட்டுவோர் 5000 ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும். இதற்கு சிறை தண்டனையும் உண்டு என்று மத்திய அரசு எச்சரித்து உள்ளது.

தற்போது அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.