நடிகர் விஷாலுக்கு வருமான வரித்துறை சம்மன்!! 27ம் தேதி ஆஜராக உத்தரவு

சென்னை:

நடிகர் விஷாலுக்கு சொந்தமான அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது. இந்த திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் பரவியது.

பின்னர் விஷால் அலுவலகத்தில் நடக்கும் சோதனைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரி விளக்கமளித்தார்.

இந்நிலையில் வரிப்பிடித்தம் செய்ததில் ரூ. 51 லட்சம் வரை அரசுக்கு செலுத்தவில்லை என்ற புகார் தொடர்பான விசாரணைக்கு தயாரிப்பு நிறுவன வங்கி கணக்கு புத்தகத்துடன் வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வருமாறு வருமான வரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது.